News November 2, 2025
நீல ரத்தம் கொண்ட உயிரினங்கள்

ரத்தம் என்றால் சிவப்பு நிறம் என்றுதானே நமக்கு தெரியும்? ஆனால், இயற்கையாகவே நீல ரத்தம் கொண்ட சில உயிரினங்கள் உள்ளன. ஹீமோசயனின் என்ற மூலக்கூறின் காரணமாக, அவற்றின் ரத்தம் நீல நிறமாக இருக்கும். நீல ரத்தம் கொண்ட விலங்குகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல் உங்களுக்கு தெரிந்த விலங்கின் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News November 3, 2025
திருப்பூர்: லஞ்சம் கேட்டாங்களா? இதை பண்ணுங்க!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dsptprdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0421-2482816 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
Wheel Chair-ல் பிரதிகாவின் கொண்டாட்டம்!

கோப்பையை கையில் ஏந்த இந்திய அணியினர் ரெடியான போது, ஓரத்தில் Wheel Chair-ல் இருந்தபடி அதை ரசித்து கொண்டிருந்தார் பிரதிகா ராவல். அதை கவனித்த ஸ்மிருதி மந்தனா, கோப்பையை வாங்குவதற்கு முன், அவரையும் மேடையேற்றினார். Wheel Chair-ல் இருந்த படியே, பிரதிகா ராவல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரதிகா, தொடர்ந்து விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது
News November 3, 2025
திமுக கூட்டணியில் தேமுதிகவா?

SIR தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், திமுக கூட்டணியில் இல்லாத தேமுதிக மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்றது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் EPS மீது அதிருப்தியில் இருந்த பிரேமலதா, திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படியொரு சூழலில், தேமுதிக பங்கேற்றது கூட்டணிக்கு அச்சாராமா என கேள்வி எழுந்துள்ளது.


