News August 24, 2025
நீலகிரி: 800க்கும் மேற்பட்ட போலீசார்கள்

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஒட்டி இதுவரை 512 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிலை ஊர்வலத்தை ஒட்டி 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 24, 2025
நீலகிரி: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

நீலகிரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Station Controller பதவிக்கான 368 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.10.2025 தேதிக்குள் <
News August 24, 2025
நீலகிரி எம்.பி நிகழ்ச்சி நிரல் விபரம்

நீலகிரி எம்.பி ராசா வரும் ஆக.26 ஆம் தேதி கோத்தகிரி புனித அந்தோனியார் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கிறார். காலை 10:30 மணிக்கு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஊட்டியில் துவக்கி வைத்தல், காலை 11:00 மணிக்கு ஊட்டியில் மருத்துவக் கல்லூரி பேருந்து நிறுத்தம் திறப்பு, 11:30 மணிக்கு காந்தல் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட உருது பள்ளியை திறந்து வைக்கிறார்.
News August 24, 2025
நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழையளவு

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதையடுத்து கூடலூரில் 2 மில்லி மீட்டர் மழையும், நடுவட்டம் 7 மில்லி மீட்டர் மழையும், பந்தலூரில் 4 மில்லி மீட்டர் மழையும், தேவாலாவில் 3 மில்லி மீட்டர் மழையும், உதகமண்டலம் 32 மில்லி மீட்டர் மழையும், பரவுட் 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.