News October 22, 2025

நீலகிரி: 5வது நாளாக இன்றும் ரத்து!

image

நீலகிரியில் பெய்துவரும் கனமழையால், குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. கனமழையால் காட்டேரி, ஹில்குரோவ் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் கடந்த 4 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News

News February 18, 2026

நீலகிரி: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 18, 2026

JUSTIN: கூடலூர் அருகே ஆண் யானை உயிரிழப்பு

image

கூடலூர் வனக்கோட்டம், பந்தலூர் வனச்சரகம், நாடுகாணி பகுதியில் காட்டி மட்டம் வனப் பகுதியில், இன்று வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆழமான பள்ளத்தாக்கு அருகே உள்ள நீரோடையில், இறந்த நிலையில் ஒரு ஆண் யானையின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்டது. இதில் இரண்டு தந்தங்களையும் கைப்பற்றப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 18, 2026

நீலகிரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!