News June 27, 2024

நீலகிரி: வெள்ள அபாய எச்சரிக்கை!

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பில்லூர் அணையின் முழு கொள் அளவான 100 அடியில், 97 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து 14,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே, ஆற்றங்கரை ஓர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Similar News

News September 10, 2025

நீலகிரி: மின்துறை சார்ந்த பிரச்னையா?

image

உதகை நகரில் ஆவின் வளாகத்தில்  அமைந்துள்ள நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 12 தேதி முற்பகல்  11 மணி முதல் முதல் 12.30 மணி வரை  நடைபெற உள்ளது. அப்போது மின் நுகர்வோர்கள் மின் கம்பம் மாற்றம், மின் அபாயம் போன்ற பல்வேறு குறைகளை தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் கால் சேகர் தெரிவித்துள்ளார் .

News September 10, 2025

நீலகிரி: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

▶️’நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
▶️குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
▶️2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
▶️100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
▶️newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
▶️மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

News September 10, 2025

நீலகிரியில் பெரும் விபத்து தவிர்ப்பு

image

நீலகிரி, யானை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கூடலுார் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்அப்போது, ஊட்டியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா வாகனம் திடீரென பிரேக் பிடிக்காமல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதியில் நுழைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் அங்கு இருந்தவர்கள் சப்தமிட்டு அனைவரையும் அப்புறப்படுத்தி பாதுகாத்தனர்.

error: Content is protected !!