News March 19, 2024
நீலகிரி: வெடி குண்டு மிரட்டல், மோப்ப நாய் சோதனை

நீலகிரி, உதகையில் இன்று (மார்ச் 19) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள புகழ் பெற்ற 2 சர்வதேச பள்ளிகளுக்கு மின் அஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் 3 வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.
Similar News
News April 3, 2025
நீலகிரி போராட்டம்: ரூ 10 கோடி வரை வருவாய் இழப்பு

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடந்தது. 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தால் ரூ.7 கோடி முதல் 10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, வணிகர்கள் தெரிவித்துள்ளனர். காட்டேஜ்கள், உணவு விடுதிகள் ஆகியவை போராட்டத்தில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.
News April 3, 2025
நீலகிரியில் சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு!

நீலகிரி: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க இங்கு <
News April 3, 2025
நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.