News January 20, 2026
நீலகிரி: வீட்டிலிருந்தே இனி கட்டணம் செலுத்தலாம்!

நீலகிரி மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<
Similar News
News January 24, 2026
நீலகிரி மீண்டும் வந்தது.. சோதனை வெற்றி!

குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் நீராவி இன்ஜின்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பர்னஸ் ஆயிலிலிருந்து டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டன. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்புக்காக திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனைத்து பழுதுகளும் நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை ஒரு பெட்டி இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
News January 24, 2026
அறிவித்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்!

நீலகிரி கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும், பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும், இக்கூட்டங்களை எந்தவொரு மத சார்புள்ள வளாகத்திலும் நடத்த கூடாது, கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தை மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
நீலகிரியில் நாளை விடுமுறை இல்லை!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை (ஜனவரி 24) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல அனைத்து அரசுப் பணிகளும், பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


