News January 2, 2026
நீலகிரி: விடுமுறை அறிவிப்பு!

நீலகிரியில் படுக இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (7.01.2025) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
நீலகிரி: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <
News January 8, 2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ரூ.3000 ரோகம் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்த செய்தியில், பரிசு தொகுப்புகளை வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு நாளை (ஜனவரி.9) விடுமுறை ரத்து செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
நீலகிரி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

நீலகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 0423-2443962 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


