News May 2, 2024
நீலகிரி வாலிபர் இத்தாலியில் மர்ம சாவு

பந்தலூர் ஆனைகட்டியை சேர்ந்தவர்கள் வில்சன்-தங்கமா தம்பதி. இவர்களின் மகன் சஜீஷ் (34). இவர் 2018 முதல் இத்தாலியில் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியாததால் இத்தாலியில் உள்ள சஜீஷின் உறவினர் உதவியுடன் விசாரித்தபோது அவர் உயிரிழந்ததும், அவரது உடல் இத்தாலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. சஜீஷ் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News December 31, 2025
நீலகிரி: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! SUPER NEWS

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
நீலகிரி: மாடு வாங்க ரூ.1.20 லட்சம்! மிஸ் பண்ணிடாதீங்க

நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வாயிலாக, கறவை மாடு வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களில், பயனாளிகளை தேர்ந்தெடுத்து, அதிகபட்சமாக 1 பயனாளிக்கு, இரண்டு கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 லட்சம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 7 சதவீத வட்டியுடன், 3 ஆண்டுகளுக்குள் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும்.
News December 31, 2025
JUST IN: நீலகிரிக்கு கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனிக்கான எச்சரிக்கை இன்றும் நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு (அ) அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.


