News August 22, 2025
நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நீலகிரி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News August 22, 2025
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்!

ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு தொழில்நுறி வழிகாட்டும் மையத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் நடைபெற்று வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான திட்ட நிரல்படி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை வார நாட்களில் நடைபெறுகிறது.
News August 22, 2025
விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 2000 டன் உரங்கள் தயார்!

என்.சி.எம்.எஸ்.,மேலாண்மை இயக்குனர் முத்துகுமார் கூறுகையில்; மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், தேயிலை தோட்டங்களை பராமரிக்க நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது,விவசாயிகளுக்கு, 10க்கும் மேற்பட்ட வகையான உரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2000 டன் உரம் பெறப்பட்டு தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கூட்டுறவு நிறுவனத்தை அணுகலாம்.
News August 22, 2025
நீலகிரியில் இந்த வாய்ப்பை விட்டுராதீங்க!

ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் 2, 2A, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), இரயில்வே தேர்வு வாரியம் (RRB), மற்றும் கூட்டுறவுத் துறை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள, ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 0423-2444004 மற்றும் 9499055948 அழைக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!