News September 11, 2025
நீலகிரி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி CLICKNOW!

நீலகிரி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <
Similar News
News September 11, 2025
வெறிச்சோடி கிடைக்கும் சேரம்பாடி பஜார்!

கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வனவிலங்கு தாக்குதலால் பொதுமக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதால், வியாபார சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சேரம்பாடி பஜார் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடிய நிலையிலும், நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
News September 11, 2025
நீலகிரியில் செல்போன் பயன்படுத்த முடியாமல் தவிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் செல்போன் டவர்கள் இல்லாததால், பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று இப்பகுதியில் உள்ள கடைகளில் யுபிஐ பேமெண்ட் வசதிகளையும் பயன்படுத்த முடியவில்லை என்று பொது மக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் இப்பகுதியை முன்னேறிய பகுதியாக மாற்ற அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 11, 2025
குன்னூர்: ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நிலம் ஒதுக்கீடு!

குன்னூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு குன்னூர் வருவாய் துறையினர் 8 ஏக்கர் நிலத்தினை நீதிமன்ற நீதிபதிகளிடம் வழங்கினர். கடந்த பல வருடங்களாக நீதிமன்றங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. நீதிமன்றத்திற்கு 2004ஆம் ஆண்டு முதல் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடர்ந்து, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனால் இந்த இடம் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.