News September 15, 2025

நீலகிரி: லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்!

image

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தேவாலா போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர், எஸ்.எஸ்.ஐ.,ரங்கராஜ். இவர் ரோந்து வாகனத்தில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார். செப்.7- இரவு, நாடுகாணி வழியாக கேரள மாநிலம், மலப்புரத்திற்கு காய்கறி கொண்டு செல்லும் லாரியை நிறுத்தி, டிரைவரிடம் லஞ்சம் வாங்கினார். இந்த வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலானது. எஸ்.பி.,நிஷா விசாரணையில், ரங்கராஜ் நேற்று சஸ்பெண்ட் செய்யபட்டார்.

Similar News

News September 15, 2025

நீலகிரி: ரயில்வே துறையில் வேலை!

image

நீலகிரி மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதி கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

நீலகிரி: தற்காலிக பட்டாசு கடைகள் விண்ணப்பிக்க அழைப்பு!

image

தீபாவளி பண்டிகை அக்.,20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பம் உள்ளவர்கள், http://www.tnesevai.tn.gov.in இணையதள வழியாக மட்டுமே விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் வாயிலாக உரிய ஆவணங்களுடன் அக்.,10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

நீலகிரி: தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

image

தொழிலாளர் உதவி ஆணையர் செய்தியில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், உள்ள, மேசன், கார்பெண்டர், கம்பிவேலை, எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர் வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக் மற்றும் சித்தாள் உள்ளிட்ட,11 தொழில் பிரிவுகளின் கீழ்,திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. நீலகிரியில் மட்டும் 500 கட்டுமான தொழிலாளர்களுக்கு, குன்னுார் மற்றும் கூடலுார் ஐ.டி.ஐ.,தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது.

error: Content is protected !!