News August 6, 2025
நீலகிரி: ரூ.62,265 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, அரசு காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.22,405 முதல் ரூ.62,265 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் <
Similar News
News August 7, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில், இன்று (ஆகஸ்ட் 6, 2025) இரவு ரோந்துப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், உதகை ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்களைப் பொதுமக்கள் அவசர உதவிக்கு அணுகலாம்.
News August 6, 2025
நீலகிரி: 21% அதிகரித்த வரையாடு எண்ணிக்கை

தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு ஆகும். கடந்த சில வருடங்களாக இதன் எண்ணிக்கை அருகி வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அரசாங்கத்தின் முயற்சியால் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 21% அதிகரித்துள்ளது. 14 வனக்கோட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 1303 வரையாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 6, 2025
வீட்டை உடைத்த கரடி: அச்சத்துடன் பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சிக்கு அருகாமையில் உள்ள இந்திராநகர் பகுதியில் கரடி ஊருக்குள் புகுந்து வீட்டை சேதம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதமடைந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு பின்பு ஊர் பொது மக்களிடம் கண்காணிப்பு கேமரா பொருத்தி கரடியை கூண்டு வைத்து பிடித்து தருவதாக தெரிவித்துள்ளார்கள்.