News August 13, 2024
நீலகிரி ரயில் தற்காலிகமாக ரத்து

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை உலக பிரசித்தி பெற்றது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மீண்டும் ரயில் சேவை துவங்கும் என்ற நிலையில் பணிகள் நிறைவு பெறாத காரணத்தால் ஆகஸ்ட் 15 வரை மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News March 4, 2026
குன்னூர் அருகே விபத்து!

நீலகிரி மாவட்டம், குன்னூர் உலிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேலாஸ் பகுதியில் நேற்று மாலை 7, குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கெந்தளா நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி மற்றும் பேருந்தின் வலதுபக்க கண்ணாடி உடைந்தன. நல்வாய்ப்பாக ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
News March 4, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்! முக்கிய தகவல்

நீலகிரியில் 6 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், 9442772701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சுற்றுவட்டார பகுதியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டங்கள் தொடர்பாக 9442772709 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
நீலகிரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <


