News January 24, 2026
நீலகிரி மீண்டும் வந்தது.. சோதனை வெற்றி!

குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் நீராவி இன்ஜின்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பர்னஸ் ஆயிலிலிருந்து டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டன. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்புக்காக திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனைத்து பழுதுகளும் நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை ஒரு பெட்டி இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
Similar News
News January 25, 2026
நீலகிரி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நீலகிரி மாவட்ட மக்கள் 04232443962 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 25, 2026
நீலகிரி மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <
News January 25, 2026
நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தவறாமல் இந்த இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


