News October 16, 2025
நீலகிரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து விவரம்

நீலகிரி மாவட்டத்தின் உதகை நகரம், உதகை ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் பகுதிகளில் இன்று இரவு காவல்துறை ரோந்து நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது மொபைல் எண்கள் மாவட்ட காவல்துறை அலுவலகம் மூலம் பொதுமக்கள் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவு, வளர்ப்பு பராமரிப்பு பிற்காப்பு பராமரிப்பு, பிரதமர் மற்றும் முதலமைச்சரின் கோவிட்-19 நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பயனடைந்து வரும் குழந்தைகளுடனான கலந்துரையாடல், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்றது.
News October 15, 2025
தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு 268 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கும் அடையாளமாக இன்று 54 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கினார். இதில் உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News October 15, 2025
நீலகிரியில் தெரிய வேண்டிய முக்கிய எண்கள்!

நீலகிரி மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1)தீயணைப்புத் துறை – 101
2)ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3)போக்குவரத்து காவலர் -103
4)பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5)ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6)சாலை விபத்து அவசர சேவை – 1073
7)பேரிடர் கால உதவி – 1077
8)குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9)சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10)மின்சாரத்துறை – 1912. (SHARE IT)