News November 22, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (22.11.2025) மற்றும் நாளை (23.11.2025) மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடிகளை தொடர்புகொண்டு விரைந்து விண்ணப்பங்களை அளிக்கலாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News November 24, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது 2026 பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். விருது பெறுபவர்களுக்கு தகுதி சான்றிதழ் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது. https://awards.tn.gov.in என்ற இணையதள வாயிலாக தகுந்த சான்றிதழ்களுடன் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 23, 2025
கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்

கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு அஜ்ஜுர் கிராமத்தைச் சேர்ந்த ஶ்ரீ ரங்கன்(65) என்பவர் இன்று காலை 3 மணிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு வெளியே வந்த போது அங்கிருந்த புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டெருமை அவரை முட்டி தாக்கியது. இதனால் காயமடைந்த அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.