News November 19, 2025
நீலகிரி மாவட்டம்: தடை அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் போன மாவட்டமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் அதிகமான சுற்றுலா பயணிகள் டால்பின் ஹவுஸ் மற்றும் லாம்ஸ் ராக் போன்ற சுற்றுலா தலங்களில் விரும்பி ரசிக்கின்றனர். தற்போது சுற்றுலா தலங்களில் நடைபாதை மற்றும் சாலை பணிகள் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
நீலகிரியில் பட்டதாரி இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொல்குடியினர்
புத்தாய்வு திட்டத்தின் கீழ் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு
₹10,000 நிதியுதவியும் முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு ₹25,000 நிதியுதவியும் வழங்கபட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை
www.fellowship.tntwd.org.in என்ற
இணையதள பக்கத்தில் (12/12/2025)
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
News November 19, 2025
மசினகுடி: யானை காணவில்லை

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்துக்கு உட்பட்ட, வாழைத்தோட்டம், மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில உலா வந்த ரிவால்டா, என்ற காட்டு யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் குறைபாடு காரணமாக, பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு இருந்தது, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திடீரென யானை காணாமல் போனது. அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
News November 18, 2025
நீலகிரி: FREEயாக தங்கம், பணம் தந்து திருமணம்!

நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT


