News October 17, 2025
நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை இரவு ரோந்து விவரங்கள்

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம் , உதகை ஊரகம் உட்கோட்டம் , குன்னூர் உட்கோட்டம் , கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் பகுதிகளில் இன்று இரவு காவல்துறை ரோந்து மேற்கொள்ளப்படுகிறது . அதில் இடம்பெற்றுள்ள DSP , ஆய்வாளர்கள் , சப் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் மொபைல் எண்கள் இடம் பெற்றுள்ளது . மேலும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0423 2444111 மற்றும் அவசர உதவிக்கு 100 அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
மேட்டுப்பாளையம் ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே நாளை முதல் 17, 19 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும். மறு மார்க்கத்தில் 18, 20 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
News October 16, 2025
நீலகிரி: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை <
News October 16, 2025
நீலகிரி ஆட்சியர் அழைப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. தோட்டக்கலை வேளாண்மை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு பட்டைய படிப்பு முடித்தவர்கள் சுய தொழிலில் தொடங்கும் வகையில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.