News August 27, 2025
நீலகிரி மாவட்டத்தில் அரசு வேலை வேண்டுமா?

நீலகிரி கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 50 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ.96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️விண்ணபிக்க https://www.drbngl.in/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும்▶️பெயர்,பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சூப்பர் வேலை வாய்ப்பு ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 8, 2026
நீலகிரி மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கோழிக்கரை, கேஎன்ஆர் பகுதிகளில் இரண்டு குட்டிகளுடன் ஒன்பது யானைகள் மூன்று நாட்களாக சுற்றி வருகின்றன. எனவே குன்னூர் வனச்சரகர் ரவீந்தர நாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொது மக்கள் வாகனங்களை கவனமுடன் இயக்கிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News March 8, 2026
நீலகிரி கலெக்டர் வேண்டுகோள்!

பந்தலூர் அருகே தாளூர் பகுதி தமிழக – கேரளா மாநில எல்லையில் கேரளம் நெடுஞ்சாலை துறையினர் மலையாள மொழியின் வரவேற்பு பலகையை பிரச்சினைக்குரிய இடத்தில் வைத்தனர். இதனால் அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், இவ்விவகாரம் தொடா்பாக வயநாடு ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.
News March 8, 2026
கூடலூர்: செக்ஷன் 17 நில பிரச்சினை – ஆட்சியரிடம் MLA மனு

கூடலூரில் செக்ஷன் 17 நில பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் அனுப்கான், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


