News October 22, 2025

நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கி தீவிரமாக உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக பல இடங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சில பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News January 25, 2026

நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தவறாமல் இந்த இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 25, 2026

முதுமலையில் பெண் யானை உயிரிழப்பு

image

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்பு காட்டுப் பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டனர். இதனையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் யானையின் உடல் கூர் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு, அதே இடத்திலேயே யானையின் உடல் புதைக்கப்பட்டது.

News January 24, 2026

நீலகிரி: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

image

நீலகிரி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

error: Content is protected !!