News October 1, 2024
நீலகிரி மழை: மலை ரயில் இன்றும் ரத்து.

நீலகிரியில் 2 நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே சாலையில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் வருகிறது. இந்த நிலையில் ஹில்குரோவ் அருகே ரயில் பாதையில் கல், மண் சரிந்ததால் ரயில் பயணம் நேற்று நிறுத்தப்பட்டது. அதை சீராக்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்ற நிலையில் இன்று ( அக்.1) ரயில் பயணம் மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளது.
Similar News
News August 14, 2025
இ-நாம்’ செயலி வாயிலாக விற்பனை செய்ய அழைப்பு!

குன்னுார், ஊட்டி ஆகிய பகுதிகளில் இரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும். மாவட்ட கலெக்டர் கூறுகையில், விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம்’ வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்கலாம்.
News August 14, 2025
தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரியகுமார் வி.பி.இளம்பரிதி, .எம்.நடேசன், ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில், நேற்று அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
News August 14, 2025
நீலகிரியில் கலெக்டர் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை நிலையங்கள், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று மூடப்படும் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.அன்றைய தினம் ஏதேனும் கடை திறந்திருந்தால்,மதுவிலக்கு மற்றும் அமலாக்கம்: 0423-2223802 உதவி ஆணையர்: 0423-2443693 டாஸ்மாக் மாவட்ட மேலாளர்: 0423-2234211 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.