News February 27, 2026
நீலகிரி மக்களே வனத்துறை எச்சரிக்கை!

கூடலூர் அருகே சேரம்பாடி – கேரள மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள காபி தோட்டங்கள் மற்றும் ஏலியாஸ் கடை பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் உணவு தேடி யானைகள் சாலைக்கு வருவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். விபத்துகளைத் தவிர்க்க இப்பகுதியில் கவனமாக வாகனங்களை இயக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 28, 2026
நீலகிரி: இது தெரியாமல் இனி சிலிண்டர் வாங்காதீங்க!

நீலகிரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News February 28, 2026
உதகை தொகுதியில் உதயநிதி போட்டியா?

சென்னை அறிவாலயத்தில் திமுகவினர் விருப்ப மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசி தலைமையில் நிர்வாகிகள் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதில், உதகை சட்டமன்றத் தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இது நீலகிரி மாவட்டத் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 28, 2026
நீலகிரி: சிறுமிக்கு பாலியில் தொல்லை; 60 ஆண்டு சிறை

கடந்த 2019ம் ஆண்டு நீலகிரியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியின் உறவிவர் 32 வயதான ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை தேவாலா மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவ்வழக்கில், அவர் மீது குற்றச்சாட்டு நிரூபணமானதால், 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு.


