News February 10, 2026
நீலகிரி: போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 12, 2026
நீலகிரி: 80 பேர் அதிரடி கைது

நீலகிரி மாவட்டத்தில், பந்தலூர் வட்டம் சேரங்கோடு கிராமம் சேரம்பாடி பஜாரில் கனரா வங்கிக்கு முன் CITU தொழிற்சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜன் தலைமையில் சுமார் 80 பேர் மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரும் 11.45 மணிக்கு கைது செய்யப்பட்டு, சேரம்பாடி சுங்கம் பகுதியில் உள்ள St. Sebastian Church Hall ல் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
News February 12, 2026
நீலகிரி : ₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் வரை பெறலாம்!

தினமும் ரூ.222 சேமிப்பை அஞ்சலக RD திட்டத்தில் முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளில் ரூ.4.5 லட்சம் வரை கிடைக்கும் . அரசு உத்தரவாதத்துடன் கூடிய இந்தத் திட்டம், சிறிய முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்பை வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தை தொடர்ந்து நீட்டித்தால், 10 ஆண்டுகளில் 11 லட்சம் வரை பெற முடியும். அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE IT
News February 12, 2026
அச்சத்தில் கோத்தகிரி மக்கள்!

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதை வனப்பகுதிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. தற்போது சமவெளிப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் உணவு (ம) தண்ணீர் தேடி மலைப்பகுதிக்கு யானைகள் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள சாலையில் காட்டு யானை ஒன்று உலா வருவதால், அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர்.


