News September 27, 2025
நீலகிரி: பெண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், தெங்குமரஹாடா பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து சென்றபோது, நீலகிரி கிழக்கு சரிவு காப்புக்காடு பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அதே பகுதியில் அந்த யானை புதைக்கப்பட்டது.
Similar News
News January 26, 2026
நீலகிரியை சேர்ந்த 3 பேருக்கு அண்ணா விருது

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களுக்கு அவர்களின் வீரதீரச் செயல்களைப் பாராட்டி அண்ணா விருது வழங்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் பா. சுரேஷ், செ. செந்தில்குமார் மற்றும் வாகன ஓட்டுநர் சங்கர் ஆகியோருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்கி கௌரவித்தார். இவர்களின் துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
News January 26, 2026
நீலகிரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நீலகிரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News January 26, 2026
JUSTIN: தேவர்சோலையில் தொழிலாளியை தாக்கிய யானை!

நீலகிரி, தேவர்சோலை பேரூராட்சி செம்பக்கொல்லி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், நேற்றிரவு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த யானை, அவரை தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின்படி, அவரை மீட்ட வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


