News August 11, 2024

நீலகிரி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 40 வயது பெண்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், அங்குள்ள ஒரு பானிபூரி கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 6-ம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிய போது, 25 வயது வாலிபர் அவரை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஊட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 29, 2026

நீலகிரி கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கட்டிட விதிமீறல்களை தொடர்ந்து, வீடு கட்டும் பணிகளுக்கு சுரங்கதுறை, பல்வேறு துறைகளின் தடையின்மை சான்று அவசியம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 1500 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கு சுரங்க துறை தடையின்மை சான்று பெற வேண்டும், 2690 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு சுரங்கம் மற்றும் வனத்துறை தடையின்மை சான்று பெற வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News January 29, 2026

நீலகிரி: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

image

நீலகிரி மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ-சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. <>அதற்கு Aadhaar App மூலம்<<>>, நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 29, 2026

பந்தலூர்: பல ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

image

பந்தலூர், சூரத் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டன. இருப்பினும், இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால், அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக இருளில் வாடி வந்தனர். இந்நிலையில் பல கட்ட போராட்டங்களுக்கு பிற தற்போது அங்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!