News April 1, 2024
நீலகிரி பாஜக வேட்பாளர் வாகனத்தில் அதிமுக கொடி

நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று உதகை நகரம் குந்தா பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரது பிரச்சார வாகனத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் கட்டியிருந்தன. அதில் அதிமுக கொடி இடம் பெற்றிருந்தது. இது குறித்து வேட்பாளர் எல்.முருகன் கவனத்திற்கு வந்தது. அதன் பிறகு அதிமுக கொடி கழற்றப்பட்டது.
Similar News
News January 28, 2026
நீலகிரியில் அதிரடி நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று (ஜன.26) தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, குன்னூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் முகமது யூசுப் தலைமையில் சிறப்பு ஆய்வு குழுவினர் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிகளை மீறியதாக 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
News January 28, 2026
நீலகிரி: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News January 28, 2026
BREAKING: ஊட்டி ரயில் சேவை ரத்து

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று மாலை குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த போது கல்லாறு – ஹில்குரோ நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது தெரிந்து மீண்டும் குன்னூர் சென்றது. தண்டவாள சீரமைப்பு பணிக்காக இன்று (ஜன.28) காலை மேட்டுப்பாளையம்-ஊட்டி சேவையை ரத்து செய்து ரயில்வே அறிவித்துள்ளது.


