News March 21, 2024
நீலகிரி; பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை சற்றுமுன் வெளியானது. இந்தப்பட்டியலில் மொத்தம் 9 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், நீலகிரி தொகுதி வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் ஆ.ராசா இந்ததொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் எல்.முருகன் அந்த தொகுதியில் போட்டியிடுவதால் நீலகிரி ஸ்டார் தொகுதியாகியுள்ளது.
Similar News
News November 4, 2025
நீலகிரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 21 தேதி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விவசாய தொடர்பான கோரிக்கைகளை எதிர்வரும் 7ம் தேதிக்குள், தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண் 72, உதகை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
கூடலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பயிற்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA) பயிற்சியினை, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கூடலூர் எம்எல்ஏ பொன். ஜெயசீலன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News November 3, 2025
நீலகிரியில் இலவச தையல் பயிற்சி!

நீலகிரியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வரும் 7ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.  15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <


