News October 18, 2025
நீலகிரி: பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள தனியார் ஆங்கில பள்ளிக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு தடுப்பு போலீஸ் குழுவினர் மோப்ப நாயுடன் விரைந்து சென்று பள்ளி அலுவலகம், வகுப்பறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். பிறகு புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
உதகை அருகே விபத்து

நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே இன்று காலை சாலையின் பக்கவாட்டு சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் உடனடியாக அங்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 18, 2025
நீலகிரியில் வேலை வேண்டுமா? APPLY NOW

உதகை அரசுக் கலை கல்லூரியில் (20/12/25)-ம் தேதி மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கு <
செய்ய வேண்டும் என வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
News December 18, 2025
நீலகிரி: இன்றே கடைசி நாள்

நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் பணிகளை செய்தவர்கள் தமிழக அரசின் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இதனை மாவட்ட சிறுபான்மை அலுவலகத்தில் இன்று (18/12/25)-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்


