News April 19, 2024
நீலகிரி தொகுதி 3 மணி நிலவரம்

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 14 இலட்சத்து 28 ஆயிரத்து 252 பேர் உள்ளனர். உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நீலகிரி தொகுதியில் இன்று வாக்குபதிவு நிலவரம் காலை 9 மணி 8.7 சதவிகிதம் . 11 மணி 21.69 சதவிகிதம். பகல் 1 மணிக்கு 40.88 சதவிகிதம். அதைதொடர்ந்து பிற்பகல் 3 மணி நிலவரம் 53.02 சதவிதம் பதிவாகியுள்ளது.
Similar News
News January 30, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வரும் பிப்-3-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்கள் கொண்டு வந்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
நீலகிரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது<
News January 30, 2026
நீலகிரி கலெக்டர் அதிரடி உத்தரவு

வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 1-ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான டாஸ்மாக் கடைகள் வரும் 1-ம் தேதி வடலூர் ராலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு மூட வேண்டும். இந்நாளில் உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


