News August 18, 2024

நீலகிரி: தேயிலை தோட்டத்தில் பதுங்கிய மலைப்பாம்பு!

image

குன்னூர் அருகே கொலக்கம்பை கோட்டக்கல் எஸ்டேட் உள்ளது. அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாக தொழிலாளர்கள் நேற்று வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து, கொலக்கம்பை அருகே அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Similar News

News November 8, 2025

நீலகிரி: ரூ.7,500 வெகுமதி.. மக்களே உஷார்!

image

நீலகிரி மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!

News November 8, 2025

நீலகிரி கலெக்டர் முக்கிய தகவல்!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து தொடுவானம் என்ற திட்டத்தின் கீழ், பழங்குடி இளைஞர்களுக்காக சேலத்தில் திறன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ஜெர்மன் மொழி கற்றல், ஓட்டுநர் பயிற்சி, துணை சுகாதார படிப்புகள் டிராக்டர் மெக்கானிக் ஆகியவை கற்றுத் தர உள்ளன. பதிவு செய்ய மற்றும் விவரங்களுக்கு 9790574437.

News November 7, 2025

நீலகிரி: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

error: Content is protected !!