News March 18, 2024
நீலகிரி: தேயிலையில் மைட்ஸ் நோய் பாதிப்பு

நீலகிரி, தேயிலையில் மைட்ஸ் நோய் வெகுவாக பரவி வருகிறது. இதனால் மகசூல் குறைந்து, விவசாயிகளுக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி போஜராஜன் இன்று(மார்ச் 18) கூறுகையில், “வறட்சியால், ‘மைட்ஸ் ‘ நோய் அதிகரித்து உள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்” என்றார்.
Similar News
News February 14, 2026
நீலகிரி: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? CLICK

நீலகிரி மக்களே.. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் <
News February 14, 2026
முதுமலையில் யானை உயிரிழப்பு!

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியில் மக்களால் அன்புடன் ‘ரிவால்டோ’ என்று அழைக்கப்பட்டு வந்த புகழ்பெற்ற யானை நேற்று உயிரிழந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உடலில் காயங்களுடன் சுற்றித் திரிந்த அந்த யானை, உடல்நிலை கவலைக்கிடமாகி எழ முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று உயிரிழந்த அந்த யானைக்கு, வனத்துறையினர் உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர்.
News February 14, 2026
கொடநாடு வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோத்தகிரி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், குற்றவாளிகள் தரப்பில் மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, சதீஷன் மற்றும் தீபு ஆகியோர் ஆஜராகினர். வழக்கில் ஆஜராகாத வாளையார் மனோஜுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் மார்ச் மாதம் 6-ம் தேதிக்கு நீதிபதி சந்திரசேகரன் ஒத்தி வைத்தார்.


