News August 13, 2024

நீலகிரி: தாயிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை!

image

கூடலூர் அருகே மசினகுடி – மாயார் சாலையில் தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று தனியாக பரிதவித்து வந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், அதனை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், ட்ரோன் உதவியுடன் தாய் யானை நடமாட்டத்தை கண்காணித்து, யானை கூட்டம் இருக்கும் இடத்தை அறிந்தனர். இந்நிலையில் இன்று குட்டி யானை தாய் யானையுடன் சேர்க்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 7, 2026

நீலகிரி: 44 பேர் வேட்புமனு தாக்கல் – ஒரு பார்வை!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாதக, மற்றும் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர். அதன்படி, உதகை – 13, குன்னுார் – 14, கூடலுார் – 17, என, 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று (ஏப்ரல் 6) மனு தாக்கல் நிறைவு பெற்றது. இதில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வரும், 9ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறலாம்.

News April 7, 2026

நீலகிரி: விடுமுறை அளிக்க உத்தரவு!

image

நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்களுக்கு ஏப் 23 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாகும். மேலும், தற்காலிக ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

error: Content is protected !!