News April 24, 2025
நீலகிரி சுற்றுலா தலங்களில் போலீஸ் கண்காணிப்பு

காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், உதகை, கோத்தகிரி, கூடலூர், குன்னூர் உட்பட்ட சுற்றுலா தலங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News August 16, 2025
நீலகிரி: டிரோன் கேமரா மூலம் யானைகள் விரட்டியடிப்பு

நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில் இரவு நேரத்தில், இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டன. வனத்துறையினர் அவைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானை சாலை மற்றும் குடியிருப்புக்குள் நுழையும் ஆபத்து இருந்ததால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து டிரோன் கேமரா பயன்படுத்தி அதிலிருந்து ஒலி எழுப்பி யானைகளை அம்பலமூலா வழியாக முதுமலை வனப்பகுதிக்கு விரட்டினர்.
News August 16, 2025
நீலகிரி: அரசுப் பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (ஷேர் பண்ணுங்க)
News August 16, 2025
நீலகிரி நகரமன்ற தலைவர்: அமைச்சரிடம் கோரிக்கை மனு

நீலகிரி, குன்னுார் நகர மன்ற தலைவர் சுசிலா திருச்சியில் உள்ள நகர்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகத்தில் நேரில் சென்று நேர்முக உதவியாளர் மணிகண்டன் சந்தித்து குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கு அடிப்படை தேவைகளான தடுப்புச் சுவர், நடைபாதைகள் மற்றும் அனைத்து பணிகள் செய்து தர கோரிக்கை மனு அளித்தார்.