News May 18, 2024
நீலகிரி: சீல் வைத்து ரூ.1,25,000 அபராதம்
ஊட்டியில் தடை செய்யப்பட்ட நிக்கோடின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சுரேஷுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நகரில் நடந்த சோதனையில், புகையிலை வைத்திருந்த கடைகளுக்கு நேற்று (மே 17) சீல் வைத்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.
Similar News
News November 20, 2024
கோத்தகிரி கூட்டுறவு வங்கியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோத்தகிரி தாலுக்காவில் ‘உங்களைத் உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கோத்தகிரி கிளை வங்கிக்கு சென்றார். அங்கு வங்கி பணிகள் மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கிளை மேலாளர் வனஜா உடன் இருந்தார்.
News November 20, 2024
நீலகிரி: இன்றைய தலைப்பு செய்திகள்
➤நீலகிரியில் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் ➤சிறுவர்களை விரட்டிய ஒற்றை காட்டு யானை ➤சிரியூர் கோயிலுக்கு செல்ல வேண்டாம் ➤புவிசார் குறியீட்டுக்கு காத்திருக்கும் ஊட்டி சாக்லெட் ➤மருத்துவமனையில் நீலகிரி எஸ்.பி ஆய்வு ➤வீரதீர செயல்புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் ➤346 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி ➤நீலகிரி பழங்குடியினரை சந்திக்கும் ஜனாதிபதி ➤நீலகிரியில் பெண்கள் கும்மி ஆட்டம்.
News November 20, 2024
நீலகிரியில் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நடத்தும் தனியார் நிறுவனங்கள், தங்கள் வேலைக்கு அமர்த்தியுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை, தொழிலாளர் நலத்துறை வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. பதிவேற்றம் செய்த விபரங்களை குன்னூர் தொழிலாளர் உதவியாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் தெரிவித்துள்ளார்.