News April 13, 2025
நீலகிரி: சிறுத்தை, கருஞ்சிறுத்தை ஒரே இடத்தில் உலா

உதகை, குளிச்சோலை பகுதியில் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை இரண்டும் ஒன்றாக உலா வந்தன. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக, குடியிருப்பு பகுதியை நோக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கருஞ்சிறுத்தை, சிறுத்தை ஒரே இடத்தில் உலா வந்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 14, 2025
நீலகிரி: சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு பணி!

குன்னுார் காட்டேரி பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக, 1.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி நேற்று துவங்கியது. பூங்காவில் பூஜைகள் போடப்பட்டு, நீலகிரி தோட்டக்கலை துணை இயக்குனர் நவநீதா, நடவு பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், குன்னுார் தோட்ட கலை துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, தோட்டக்கலை அலுவலர் பிரகாஷ், மற்றும் பண்ணை பணியாளர்கள் பங்கேற்றனர்.
News August 14, 2025
நீலகிரி: இ-நாம் திட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு!

நீலகிரி மக்களே விவசாய விளை பொருள்களை விற்க ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் விவசாய விளை பொருள்களை கொண்டு செல்வதற்கு செலவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலரை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம். என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
இ-நாம்’ செயலி வாயிலாக விற்பனை செய்ய அழைப்பு!

குன்னுார், ஊட்டி ஆகிய பகுதிகளில் இரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும். மாவட்ட கலெக்டர் கூறுகையில், விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம்’ வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்கலாம்.