News October 31, 2025
நீலகிரி: சாய்பாபா பெயரில் பெண்ணிடம் மோசடி!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுசி(37) என்பவரை ஏமாற்றிய வழக்கில் ராஜ்குமார்(46) என்பவர் கைது செய்யப்பட்டார். சுசியின் வீட்டை நிதி நிறுவன கிளை அலுவலகமாக போக்கியத்திற்கு எடுப்பதாக கூறி, ரூ.6.24 லட்சம் பெற்றும் பணம் திருப்பி தரவில்லை. புகாரின் பேரில் ஊட்டி ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர். அவர் நிதி நிறுவனம் மட்டுமின்றி சாய்பாபா பெயரில் ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார்.
Similar News
News October 31, 2025
நீலகிரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர <
News October 31, 2025
பந்தலூர்: சாலையோர பள்ளத்தில் சிக்கிய சிலிண்டர் லாரி!

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளுக்கு ஈரோடு பகுதியில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிய லாரி ஒன்று, எருமாடு பகுதிக்கு சென்றது. அப்போது மேங்கோரேஞ்ச் என்ற இடத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க, முற்பட்டபோது சாலையோர பள்ளத்தில் லாரி இறங்கியது. ஓரப்பகுதியை ஒட்டி மேடுபாங்கான இடமாக இருந்ததால் பெரிய அளவிலான ஆபத்து ஏற்படவில்லை.
News October 31, 2025
நீலகிரியில் நாளை கிராம சபை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் நாளை காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட வரவு செலவு அறிக்கை விவரங்களை கிராம சபை கூட்டத்தில் படித்துக் ஒப்புதல் பெற வேண்டும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.


