News April 12, 2025
நீலகிரி: கேட்பாரற்று விடப்பட்ட ஆண் சடலம்

நீலகிரி மாவட்டம் பரளியார் அருகே நீலகிரி மற்றும் கோவை மாவட்ட எல்லைகள் உள்ளன. இந்நிலையில் இங்குள்ளஅடர்ந்த வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இறந்து பல மாதங்கள் ஆகி முகம் மட்டும் தெரியும் நிலையில் உடம்பெல்லாம் மக்கிப்போன நிலையில் வெறும் எலும்புக்கூடு மட்டும் மிஞ்சி உள்ளது. எந்த மாவட்ட எல்லைக்குள் வரும் என்ற பிரச்சனையால் பிரேத பரிசோதனை செய்யாமல் எலும்புக்கூடு அவ்விடமே விடப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
நீலகிரி அருகே விபத்து

திருச்சி, முசிறியைச் சேர்ந்த 13பேர் ஊட்டிக்கு மினி வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் நேற்று இரவு குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, பர்லியாறு அருகே மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News July 4, 2025
நீலகிரி: பாலியல் புகாரில் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

நீலகிரி, உதகை அருகே உள்ள அரசு பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அறிவியல் ஆசிரியர் செந்தில்குமர் மீது புகார் எழுந்தது. 6ம் வகுப்பு மாணவி ஒருவர் தகாத முறையில் தொட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் அவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
News May 8, 2025
நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்கள்!

▶️நீலகிரி மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0423-2442344. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️ தீ தடுப்பு பாதுகாப்பு 101. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. இந்த மிக முக்கிய எங்களை உங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!