News October 17, 2025
நீலகிரி: கும்கி யானைகளிடன் சிக்கிய ‘ரோலெக்ஸ்’!

கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் ‘ரோலக்ஸ்’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது. இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்து முதுமலை பகுதியில் இருந்து இரண்டு கும்கியானைகள் உதவியுடன் தொண்டாமுத்தூர் வளையம் பாளையம் பகுதியில் யானையைப் பிடித்தனர்.
Similar News
News December 13, 2025
உதகை அருகே அரசு பேருந்து விபத்து!

நீலகிரி: உதகையிலிருந்து பெந்தட்டி கிராமம் நோக்கி 40 பேருடன் சென்ற பேருந்து, பாரஸ்ட் கேட் பகுதியில் எதிரே வந்த லாரிக்கு இடம் கொடுக்கும் போது அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மின்கம்பம் பேருந்தின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
News December 13, 2025
அருவங்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்!

குன்னூர், பழைய அருவங்காடு பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சமீபகாலமாக இங்குள்ள வளர்ப்பு நாய்கள் மாயமான நிலையில், அவற்றை சிறுத்தை வேட்டையாடி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையின் தொடர்ச்சியாக, மீண்டும் இரவு நேரத்தில் இப்பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அங்கிருந்த பாத்திரங்களையும் உருட்டிவிட்டு சென்றுள்ளது.