News September 27, 2025
நீலகிரி காவல் நிலையங்களில் தூய்மைப் பணி ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், தேவாலா மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இன்று ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா குறிப்பிட்ட காவல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுகள் நடத்தினார். காவல் நிலையப் பகுதிகளை நிரந்தரமாகத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
Similar News
News February 6, 2026
நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க <
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 6, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பிப். 20-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்களும் நேரில் பங்கேற்க உள்ளனர். எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News February 6, 2026
நீலகிரி: கார் மீது லாரி ஏறி பயங்கர விபத்து!

நீலகிரி: குன்னூர் அருகே அருவங்காடு எம்.ஜி. காலனி பகுதியில் நேற்று உதகையிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் இருந்த கடையின் மீது மோதி கார் ஒன்றின் மேல் ஏறி நின்றது. இச்சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சீர்செய்தனர்.


