News February 25, 2026
நீலகிரி: கார் – பிக்கப் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி சாலையில் நேற்று பிக்கப் வாகனம் ஒன்றும், எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்களில் பயணித்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.
Similar News
News February 25, 2026
நீலகிரி மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT…

1. உதகை – 0423-2442433
2. குன்னூர் – 0423-2206102
3. கோத்தகிரி – 04266-271718
4. குந்தா – 0423-2508123
5. கூடலூர் – 04262-261252
6. பந்தலூர் – 04262-220734
ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும். இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News February 25, 2026
உதவி அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு: ஆட்சியர்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆடியோலாஜிஸ்ட், தெரபிக் அசிஸ்டன்ட், எம்டிஎம், கவுன்சிலர், ரேடியோகிராபர், மற்றும் மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. www.nilgiris.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
News February 25, 2026
நீலகிரி: இனி உங்க Whatsapp-ல் ஆதார் கார்டு!

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <


