News September 26, 2024
நீலகிரி: காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
நீலகிரி: பந்தலூர் தாலுகா சேரம்பாடி அடுத்த சப்பந்தோடு பகுதியை சேர்ந்தவர் குஞ்சு முகம்மது (59 ). இவர் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடிக்கடி நடக்கும் யானை தாக்குதலால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News November 20, 2024
நீலகிரி: வீரதீர செயல்புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு வெளியிட்ட அறிக்கையில், வீரதீர செயல்கள் புரிந்து வரும் 13 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் வரும் இருபதாம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.
News November 20, 2024
நீலகிரி: 346 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி
நீலகிரி மாவட்டத்தில் நடந்த கலை திருவிழாவில் திறமைகளை வெளிப்படுத்திய 346 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வர்ணம் தீட்டுதல், திருக்குறள் ஒப்பிவித்தல், நாட்டுப்புற நடனம், பறை இசைத்தல் உள்ளிட்ட 84 வகை போட்டிகள் உள்ளன. வட்டார, மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்கள் தற்போது மாநிலப் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
News November 20, 2024
நீலகிரி பழங்குடியினரை சந்திக்கும் ஜனாதிபதி
வரும் 27ஆம் தேதி கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஊட்டி ராஜ்பவன் வருகிறார். அன்றைய தினம் ஓய்வு எடுக்கிறார். நவ.28ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கிறார். 29ஆம் தேதி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.