News December 1, 2024

நீலகிரி கனமழை பெய்யலாம் 

image

1977-க்குப் பிறகு கொங்கு மண்டலத்தில் புயல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார். ஃபெஞ்சல் புயல், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா சென்று அரபிக்கடல் செல்லும் எனவும், ஊட்டியில் கனமழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் நீலகிரியில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 18, 2025

நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்: SAVE பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகாளல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இவற்றால் அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அவசர உதவி எண் தான் 1800 425 4343. இதில் வனவிலங்குகளின் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம். SHARE IT!

News August 18, 2025

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்ட காவல்துறையால் இன்று (17.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் உதவி தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்களும் அடங்கியுள்ளது.

News August 17, 2025

நீலகிரி: புதிய வீடு கட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், www.onlineppath.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானத் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!