News October 19, 2025

நீலகிரி: கனமழை காரணமாக ரத்து அறிவிப்பு

image

குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். ஹில் குரோவ், ரன்னிமேடு ரயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதிகளில் தண்டவாளத்தின் மீது மண் சரிந்துள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி சேவை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. குன்னூர் உதகை மலை ரயில் சேவை வழக்கம்போல் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

Similar News

News October 19, 2025

நீலகிரி: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் மூலம்<<>> வரும் அக்.29க்குள் விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்த நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்க SHARE IT

News October 19, 2025

நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்!

image

நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் மூன்று நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு: ஊட்டி123, குந்தா 49, கெத்தை 56, கிண்ணகோரை 41, பாலகோலா 39, குன்னூர் 95, பார்லியார் 93, எடப்பள்ளி 113, கோத்தகிரி 52, கோடநாடு 56, பந்தலூர் 74, கூடலூர் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News October 19, 2025

நீலகிரி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தீபாவளி வாழ்த்து!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். மேலும் அனைத்து மக்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

error: Content is protected !!