News June 26, 2024
நீலகிரி: ஒரே வாரத்தில் ரூ.1.29 கோடி வருமானம் அதிகரிப்பு

குன்னூர் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 25வது ஏலத்தில் தேயிலை தூள் வரத்து மற்றும் விற்பனை உயர்ந்தது. அதில் மொத்தம் 13.02 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்றது. 14.79 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு 113.60 ரூபாய் என இருந்தது. கடந்த வாரத்தை விட இந்த ஏலத்தில் 2.32 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. இரு வாரங்களை ஒப்பிடுகையில், 5 லட்சம் கிலோ தேயிலை தூள் அதிகமாக வந்துள்ளது.
Similar News
News March 2, 2026
கூடலூரில் கருப்புக் கொடி கட்டும் அதிமுக கூட்டணிக் கட்சியினர்!

கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ‘பிரிவு 17’-ன் கீழ் வரும் சுமார் 31,500 ஏக்கர் ஜன்மம் நிலங்களை வன நிலங்களாக மாற்றும் தமிழக அரசின் முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நடவடிக்கையால் பல தலைமுறைகளாக அங்கு வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, அ.இ.அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
News March 2, 2026
நீலகிரி மக்களே முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசின் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், நீலகிரி மாவட்டத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் அவர்களின் இல்லங்களுக்கே வந்து வழங்கப்படவுள்ளன. இன்று மார்ச்.02 (திங்கட்கிழமை) மற்றும் நாளை மார்ச்.03 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இந்தச் சேவையைத் தகுதியுள்ள பயனாளிகள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News March 2, 2026
நீலகிரி இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று இரவு ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர் அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.


