News January 21, 2026
நீலகிரி: ஒரே நாளில் 12 கட்டிடங்களுக்கு சீல்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்ட 12 கட்டிடங்களுக்கு மாவட்ட கமிட்டியால் ஒரே நாளில் சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2 நாட்களாக இப்பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஆர்.கே.புரம், கவர்னர் சோலை ரோடு மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் கட்டிடங்கள் பூட்டி முத்திரை வைக்கப்பட்டன. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News January 23, 2026
நீலகிரி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<
News January 23, 2026
நீலகிரி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 23, 2026
நீலகிரி: 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்தது!

நீலகிரி மாவட்டம் முதுமலை மசனகுடி பகுதியில் ரிவால்டோ யானை, தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் மற்றும் கண் குறைபாடு காரணமாக, வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியில் உலா வந்து விவசாய நிலங்களில் பயிர்களை உட்கொண்டு வந்தது. வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்தனர். வனத்துறை கண்காணிப்பில் இருந்து காணாமல் போன காட்டு யானை ரிவால்டோ, 3 மாதத்திற்கு பின் தென்பட்டதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.


