News January 3, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜன.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் உதகை, குன்னூர், கூடலூர், தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News January 5, 2026

நீலகிரியில் தேயிலை பறிக்க தடை

image

நீலகிரி மாவட்டம் இத்தலார் அருகே உள்ள பூர்த்தியான பகுதியில் தேயிலை தோட்டத்தில் பதுங்கி உள்ள புலி வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் உள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டார கிராம மக்கள் தேயிலை பறிக்கவும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மைக் மூலம் கிராமப்புறங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 5 முதல் 7 வயது மதிக்கத்தக்க ஆண் புலி என தெரிய வந்துள்ளது

News January 5, 2026

நீலகிரி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று, பொருட்கள் வினியோகிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இரண்டாம் நாளாக இன்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. எனவே, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், அந்தந்த பகுதிகளுக்கு வரும் வாகனங்களின் வாயிலாக தவறாமல் ரேஷன் பொருட்களை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

News January 5, 2026

நீலகிரி: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

error: Content is protected !!