News December 27, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குன்னூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (டிச.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100-ஐ டயல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 5, 2026

நீலகிரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News February 5, 2026

நீலகிரி: வனப்பகுதியில் பெண் சடலம்

image

தேவாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தேவாலா காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

News February 5, 2026

கோத்தகிரியில் கடித்து குதறிய சிறுத்தை

image

கோத்தகிரி அருகே தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு இரவு காவலாளியாக உள்ள ஜனக் என்பவரது மகன் பகதூர்(25) பெங்களூரில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் ஒரு வார விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பள்ளி வளாகத்தில் நேற்று இரவு புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாட முயற்சித்த போது விரட்ட சென்ற பகதூரை சிறுத்தை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!