News October 29, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (28.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த விவரம் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊட்டி நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
நீலகிரி: G Pay / PhonePe இருக்கா?

நீலகிரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News October 29, 2025
நீலகிரி: கேன் தண்ணீர் பயன்படுத்துவர்கள் கவனத்திற்கு

நீலகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
News October 29, 2025
நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.1-ம் தேதி அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் கிராம சபையில் பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் தங்களது பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.


