News October 27, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம் , உதகை ஊரகம் உட்கோட்டம் , குன்னூர் உட்கோட்டம் , கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் பகுதிகளில் இன்று காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள், மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0423 2444111 மற்றும் அவசர உதவிக்கு 100 அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 27, 2025
பார்சலில் உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி வாங்கி ஹோட்டலுக்கு பத்து ரூபாய்க்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம் பரிதி கூறுகையில் “குன்னூர் அம்மா உணவகத்தில் பார்சலில் உணவு வாங்குவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீதும், பார்சல் வழங்கும் ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News October 26, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

நீலகிரியில் நகராட்சி (ம) பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நாளை(அக்.27) முதல் துவங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கோரிக்கை வைக்கலாம். (SHARE)
News October 26, 2025
நீலகிரி: பள்ளியில் வேலை.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்

மத்திய அரசின் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி முதல்வர், ஆசிரியர், விடுதி காப்பாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10th, 12th, டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 முதல் அதிகமா ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு https://nests.tribal.gov.in/ என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கவும். அக்.28-ம் தேதி கடைசி. (அரசு வேலை தேடும் நபருக்கு SHARE பண்ணுங்க)


