News October 28, 2025
நீலகிரி: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (SHARE பண்ணுங்க)
Similar News
News October 28, 2025
நீலகிரி: கொட்டிக்கிடைக்கும் வேலைகள்

1) ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் வேலை (ongcindia.com)
2) உளவுத்துறையில் வேலை (mha.gov.in)
3) ரயில் நிறுவனத்தில் வேலை ( irctc.com)
4)பெல் நிறுவனத்தில் வேலை (bel-india.in)
5) யூகே வங்கியில் வேலை (uco.bank.in)
6) இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை (sac.gov.in)
7) ராணுவத்தில் 1426 பேருக்கு வேலை (territorialarmy.in)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News October 28, 2025
ஊட்டி: இங்கு போகாதீங்க.. எச்சரிக்கை

கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக வெளி மாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசிக்க சென்று வருகின்றனர். இவ்வாறு, செல்லும் சுற்றுலா பயணியர் ஊட்டி சாலை நடுவட்டம் அடுத்து உள்ள தெய்வமலை அருகே, சாலையோர நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்கின்றனர். ஆபத்தான பகுதி என்பதால், நீர்வீழ்ச்சி அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News October 28, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று (27.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பை நீலகிரி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு 100-ஐ டயல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


